
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 49ஆவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், ஐ.நா முன்றலில் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பல்வேறு பதாதைகளை ஏந்திய வண்ணம் போராடக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.