உக்ரைன் முதல் பெண்மணி ஒலேனா ஸெலன்ஸ்கா ரஸ்ய படையினரால் “உக்ரைன் குடிமக்கள் படுகொலை செய்யப்படுவதை” கண்டித்து ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
ரஸ்ய படையெடுப்பு நடந்து, அது மில்லியன் கணக்கானவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு பயங்கரமான யதார்த்தத்தை உருவாக்கியுள்ளது என்பதை நம்ப முடியவில்லை என்று அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பாளரான புடின், உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு இலகுவான வெற்றியை பெற்றுவிடலாம் என்று நினைத்தார். ஏனினும் அவர் நம் நாட்டையும், நம் மக்களையும், அவர்களின் தேசபக்தியையும் குறைத்து மதிப்பிட்டார்” என்று உக்ரைனின் முதல் பெண்மணி குறிப்பிட்டுள்ளார்
“கிரெம்ளின் பிரசாரகர்கள் உக்ரைனியர்கள் தங்களை மீட்பர்களாக மலர்களால் வரவேற்பார்கள் என்று நினைத்தார்கள். எனினும், அவர்கள், உக்ரைனிய பொதுமக்களால் “மொலோடோவ் கொக் டெய்ல்களால்” எறிகுண்டுகளால் தவிர்க்கப்பட்டனர்,” முதல் பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அணு ஆயுதப் போரை ஆரம்பிக்கப்போவதாக அச்சுறுத்தும்; புடினைத் தடுக்காவிட்டால், உலகில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இருக்காது என்றும் ஒலெனா தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்