
கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு இளம் அதிபரை நியமித்து தாருங்கள் என தெரிவித்து பெற்றோர் கெயெழுத்து போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர்.





குறித்த போராட்டம் நேற்று காலை 7.30 மணியளவில் பாடாலை பிரதான வாயிலில் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றம் கிராம மட்ட அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த கையெழுத்து பெறும் போராட்டத்தில் தமது பாடசாலைக்கு இளம் அதிபர் ஒருவர் நியமித்து தருமாறு தெரிவித்து பெற்றோர் ஒப்பமிட்டனர்.
2009ம் ஆண்டுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் இருந்த வளர்ச்சி தற்பொழுது இல்லாது போயுள்ளது. மாணவர் தொகையும் படிப்படியாக குறைந்துள்ளது. 1500 மாணவர்கள் வரை கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாணவர் தொகை இன்று 250 பேராக குறைவடைந்துள்ளது. கடந்த வருடம் முதலாம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பில் 2 மாணவர்கள் மாத்திரமே இணைத்து கொள்ளப்பட்டனர்.
அவ்வளவு தூரம் பாடசாலையின் வளர்ச்சி குன்றியுள்ளது. பாடசாலைக்கு கடந்த ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஓய்வுநிலைக்கு குறுகிய காலத்தை கொண்டவர்களாகவே நியமிக்கப்பட்டனர். அவர்களின் ஓய்வு காலத்திற்குள் குறித்த பாடசாலையை வளர்ச்சி பாதைக்குள் கொண்டு செல்ல முடியாது.
யுத்தத்திற்கு முன்னர் மிளிர்ந்த எமது பாடசாலை இன்று வளர்ச்சி பாதையைவிட்டு கீழ் இறங்கி உள்ளது. இதற்கு காரணம் கல்வி அதிகாரிகள். அவர்கள் எமது பாடசாலையின் வளர்ச்சியை பற்றி சிந்திப்பதில்லை. தற்பொழுதும் நியமிக்கப்பட்டுள்ள அதிபர் ஓய்வு காலத்திற்கு குறுகிய காலப்பகுதியை கொண்டவராக இருக்கின்றார்.
எமது பாடசாலையை கடந்த காலங்களைபுான்று வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு இளம் துடிப்புள்ள அதிபரை நியமித்து தாருங்கள். அதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்கள், கிராம மட்ட அமைப்புக்களாக நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.
அதற்காகவே இந்த கையெழுத்துகள் பெறப்பட்டு வடமாகாண ஆளுநரிற்கு அனுப்பி வைக்க உள்ளோம். எமது பாடசாலையின் நிலை தொடர்பில் வடக்கு மகாண ஆளுநர், அமைச்சின் செயலாளர் ஆகியுார் நேரடி கள ஆய்வினை மேற்கொள்ள வே்ணடும். வளர்ச்சி பாதை குன்றியமைக்கான காரணத்தை கண்டறி ய வே்ணடும். அதற்கான கால அவகாசத்தை தந்து கலந்துரையாடல் ஒன்றின் ஊடாக பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் ஆராய நடவடிக்கை எடுக்க வு்ணடும் என பெற்றோர் இதன்போது தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்பினருக்கு எழுத்து மூலமான கடிதங்களையும் அனுப்பியுள்ள போதிலும் திருப்தியான பதில் கிடைக்கவில்லை எனவும் பெற்றோர். தெரிவிக்கின்றனர்.