நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், வெதுப்பங்கள் மூடப்பட்டு வருவதால் உணவுகளை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அத்துடன் உணவு பொருட்களுக்கான விலையும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. காலை, மதிய உணவை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக அரச, தனியார் ஊழியர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மதிய உணவை பெற்றுக்கொள்வதற்காக திறக்கப்பட்டிருக்கும் உணவகங்களை தேடி நீண்டதூரம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், உணவகங்களில்; வழமையைவிட உணவு பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் ஒரு நாளை செலவழிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.