உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் இன்றுடன் 14 ஆவது நாளாக நீடித்து வருகின்றது. உக்ரைனின் சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றிவிட்டன. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை பிடிக்க ரஷ்ய இராணுவம் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதற்கு உக்ரைன் இராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.இதனால் கீவ், கார்கிவ், சுமி உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அங்கு ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில்,இர்பின் நகர் மீது ரஷ்ய இராணுவம் குண்டு மழை பொழிந்ததால் மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுடன் அந்நகரை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இதன்போது இரண்டு கை குழந்தைகளுடன் கிளம்பிய மனைவியை வழியனுப்பிய பொலிஸ் அதிகாரியை அவரது குழந்தை கட்டி அனைத்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்துள்ளது.
உக்ரைனிய காவல்துறை அதிகாரியான தன் தந்தையை பிரிய மனமில்லாமல் குழந்தை அழுது அடம் பிடிக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி பார்ப்பவர்களின் கண்களை கலங்க வைத்துள்ளதுடன்,போரின் கோரமுகத்தினையும் வெளிப்படுத்தியுள்ளது.