யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் வாடகை அறையில் தங்கி இருந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையைக் காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி எனக் கூறி திருநெல்வேலி பகுதியில் வாடகை அறையில் தங்கி இருந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் நடத்தைகளில் வீட்டு உரிமையாளர் சந்தேகம் அடைந்து , அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவலின் பிரகாரம் குறித்த வீட்டுக்குச் சென்ற பொலிஸார் வாடகை அறையில் தங்கி இருந்த யுவதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன் போது குறித்த யுவதி மருத்துவ பீட மாணவி அல்ல என்பதனை கண்டறிந்த பொலிஸார் , யுவதி காண்பித்த மாணவி அடையாள அட்டையும் போலியானது எனக் கண்டறிந்துள்ளனர். அதனையடுத்து யுவதியைக் கைது செய்த பொலிஸார் , விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் யுவதியை முற்படுத்தியதை அடுத்து , நீதவான் யுவதியை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார