
எரிபொருள் பெற்றுக்கொள்ள டோக்கன் முறை கிளிநொச்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்பு காணப்படுவதுடன் டோக்கன் நடைமுறையும் காணப்படுகின்றது.





அவ்வாறு டோக்கனன் பெற்றவர்களுக்கும் மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளே வழங்கப்படுவதன் காரணமாக வாடகை வாகன சாரதிகள் நாளாந்தம் பல மணிநேரம் எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் நிற்கின்றனர்.
இதனால் தமது நாளாந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.