சூடு பிடிக்கும் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட பிடுங்குப்பாடுகள்..! வழக்கம்போல் நடக்கும் மாவட்ட செயலர் பதில்.. |

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் இணை தலைவர்களுடைய திகதிகள் பெறப்பட்டு அதனடிப்படையில் வழமை போன்று கூட்டப்படும் என யாழ் மாவட்டச் செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு அந்தக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கம், மாவட்ட செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது  விடயமாக   யாழ் மாவட்ட செயலரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அவர் தெரிவிக்கையில்  ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கம், நேற்று முன்தினம் (09) கடிதம் மூலம் அறியப்படுத்தியுள்ளார். பிரதமரின் இணைப்புச் செயலாளர் என்ற அடிப்படையில், அவர் இவ்வாறானதொரு கடிதத்தை அனுப்பியுள்ளார் எனத் தாம் கருதுவதாகவும் மாவட்ட செயலர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோரிடம் திகதி கோரப்பட்டு,  அதற்கமைவே வழமை போன்று கூட்டத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம், கூட்டம் தொடர்பான அழைப்பிதழ் , கீத்நாத் காசிலிங்கத்திற்கும் அனுப்பப்படும் என்றும் மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும்  தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin