
யாழ்.கொக்குவில் பகுதியில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைத்த நீதிமன்றம் சந்தேகநபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் பணித்துள்ளது.
கடந்த ஆண்டு தாவடி தெற்கு பகுதியில் ஒருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் தேடப்பட்டுவந்தார் எனவும் அவர் கடந்த செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர்.
குறித்த சந்தேகநபர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர்போல் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்