
வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்கும் 02 மாணவிகளுக்கும்
யா/ தொண்டைமானாறு வீரகத்தி மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் 01 மாணவிக்கும் என மூன்று துவிச்சக்கர வண்டிகள் இன்று (11/03) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.



சந்நிதியான் ஆச்சிரமத்தில் அதன் இயக்குநர் கலாநிதி மோகனதாஸ் தலமையில் இடம் பெற்ற
இவ் உதவிச் செயற்றிட்ட நிகழ்வில் ஆசிரியர் இரா.இ. செல்வவடிவேல், இளைப்பாறிய அதிபர் திரு. ஆ. சிவநாதன், ச. புவிச்சந்திரன், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், பயனாளிகள், பெற்றோர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.