
வடமராட்சி மந்திகைக்கும் மாலிசந்திக்கும் அண்மித்த பகுதியில் சற்றுமுன் இடம் பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.
சற்று முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும், நெல்லியடி நோக்கி கொண்டிருந்த உந்துருளியும்
மோதிக்கொண்டதில் அறுவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இதில் மோட்டார் சைக்கிளில் தனது இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து ஏற்றிவந்த போதே முச்சக்கர நன்றியுடன் மோதுண்டு விபத்து இடம் பெற்றுள்ளது. இதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்து மூவரும் ஆக் மொத்தம் அறுவர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை கொடிகாம் பருத்தித்துறை வீதியில் இடம் பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.