கடந்த மாதம் 24 ஆம் திகதியிலிருந்து உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஸ்ய படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள இரண்டு நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதால், போரின் புதிய திசையை குறிப்பிடுவதாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.
ரஷ்ய படைகள் கடந்த இரண்டு வாரங்களாக உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது மேற்கு எல்லையில் மிக தொலைவில் உள்ள நகரங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தியன் மூலம் ரஷ்யா போருக்கான புதிய திசையை மாற்றியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று துருக்கியில் ரஷ்யா- உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.