ரஷ்யாவுக்கு எதிரான போரில் 1,300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்யாவின் படைகளை முன்னேற விடாமல் உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் தரப்பில் 1300 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
மேலும், உக்ரைன் தலைநகர் மீது தொடர்ச்சியாக வெடிகுண்டுகளை வீசவும், நகரத்தை கைப்பற்ற குடியிருப்புவாசிகளை கொல்லவும் ரஷ்யா முயற்சி மேற்கொள்ளும். அதுவே அவர்களின் இலக்கு என்றால், அவர்கள் வரட்டும். அவர்கள் குண்டுவீச்சை நடத்தி முழு பிராந்தியத்தின் வரலாற்று நினைவகத்தையும், கீவின் கலாச்சார வரலாற்றையும், ஐரோப்பாவின் வரலாற்றையும் அழித்தால், அவர்கள் கீவில் நுழைய முடியும்’ என்றும் உக்ரைன் ஜனாதிபதி ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.