நெதர்லாந்துக்கான அமெரிக்க தூதராக இந்திய பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
இவர் காஷ்மீரில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த வரும், அமெரிக்காவின் பிரபல அரசியல் செயற்பாட்டாளருமான ஷெபாலி ரஸ்தான் துகல் (வயது 50) என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “2 பிள்ளைகளுக்கு தாயான துகல், அனுபவம் வாய்ந்த அரசியல் செயற்பாட்டாளர், பெண்கள் உரிமைகளுக்கான வக்கீல் மற்றும் மனித உரிமை ஆர்வலர் என பன்முகங்களை கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளது. குறித்த பெண் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.