இரசாயன ஆயுதங்களைத் தடை செய்யும் ஒப்பந்தத்துக்குக் கீழ்ப்படியுமாறு அனைத்து நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதுடன், ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான நேரடிப் பேச்சு வார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் இரசாயனத் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் ரஷ்யாவின் தாக்குதல் குறித்து நேற்று இடம்பெற்ற ஐ.நா பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் உரையாற்றும் போதே ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இதனைத் தெரிவித்தார்.
உக்ரைன் இரசாயனத் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள ரஷ்யா, இந்த விடயம் குறித்து அவசரமாக ஆய்வு செய்ய ஐ.நா பாதுகாப்பு பேரவையைக் கூட்ட அழைப்பு விடுத்திருந்தது.