முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேசத்தில் நட்டாங்கண்டல் பொலிஸ் காவலரண் பகுதியில் வைத்து முறையற்ற அனுமதியினை பயன்படுத்தி மணல் ஏற்றிச் சென்ற இரண்டு கனரக வாகனங்களும் அதன் சாரதிகளும் நட்டாங்கண்டல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நட்டாங்கண்டல் பொலிஸ் காவலரண் ஊடாக இன்று மாலை பயணம் செய்த இரண்டு கனரக வாகனங்களைச் சோதனை செய்தபோது முறையற்ற அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இரண்டு கனரக வாகனங்களும் அதன் சாரதியினரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு கனரக வாகனங்களையும் எதிர்வரும் (16.03.2022) புதன்கிழமை மாங்குளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
மாந்தை கிழக்கு மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்தும் மணல் வளங்கள் அகழப்பட்டு ஏற்றப்படுகின்றன என்று பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பொதுமக்களால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.