நாடு தற்போது பயங்கரமான நிலைமைக்கு சென்றுக்கொண்டு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
விசேடமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளமை, அதேபோன்று மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அசௌகரியங்கள் என்பவற்றுடன் அரசாங்கம் பயணிக்கும் விதம் என்பவற்றால் நாடு மிகவும் பயங்கரமான நிலைமைக்கு சென்றுக்கொண்டிருக்கின்றது.
இவ்வாறான காரணங்களால் நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே மக்களை ஒன்றுதிரட்டும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது. நாளைய தினம் கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு நடவடிக்கைக்கு மக்களை அணித்திரளுமாறு நாம் அழைப்பு விடுகின்றோம் என்றார்.