
எரிபொருள் விலை விலை அதிகரிப்பை தொடர்ந்து பஸ் கட்டணமும் உயர்ந்துள்ளது. புதிய பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைய 17 ரூபாயாகக் காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் கட்டணம், 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டீசல் நிவாரணத்தை தருமாறும் இல்லையேல் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறும் தனியார் பஸ்களின் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையிலேயே பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.