பாராளுமன்றம் என்பது தான் விரும்பாத இடம் என்றும் அங்கு கதைக்கும் விடயங்களை செவிமடுக்க முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், அரசியல்வாதிகளின் கதைகளைக் கேட்பதற்கு மக்கள் விருப்பமற்ற நிலையிலேயே உள்ளனர். இன்று நாட்டை அவ்வாறான ஒரு நிலைமைக்கு அரசியல்வாதிகள் கொண்டு வந்து விட்டுள்ளனர். ஒரு விடயத்தை அடிப்படையாக வைத்து எவ்வாறு தர்க்கிக்க வேண்டம் என்பது சட்டத்தரணிகளுக்கு கற்றுக்கொடுக்கப்படுகின்றது. எனினும் இதன் தலைகீழ் நிலையை கற்றுக்கொள்வதற்கு பாராளுமன்றத்துக்கு சென்று அமர வேண்டும்.
கைதிகள் தாங்கள் செய்த குற்றத்துக்காக தண்டனையை எதிர்கொள்பவர்கள். எனினும் இந்த நாட்டின் அரசியல்வாதிகள் செய்யும் குற்றங்களால் நாட்டு மக்களே துன்பத்தை எதிர்கொள்கின்றனர்.
கைதிகளை மட்டும் குற்றவாளிகளாக கருத முடியாது. இவ்வாறான பல குற்றங்களை செய்தவர்கள் சமூகத்தில் இருக்கின்றனர். எனினும் கைதிகள் தாங்கள் செய்த குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.