ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான நான்காவது சுற்று பேச்சுவார்த்தை இன்று முற்பகல் உள்ளூர் நேரப்படி 10:30 மணிக்கு இணைய தொழில்நுட்பம் ஊடாகஆரம்பிக்கவுள்ளது.
உக்ரைனின் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ இதனை தெரிவித்தார்.
வார இறுதி பேச்சுவார்த்தைகள் “ஆக்கபூர்வமானவை” என்று உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர் மைக்கைலோ பொடோலியாக் முன்னதாக தெரிவித்திருந்தார். ரஷ்யா ஏற்கனவே ஆக்கப்பூர்வமாக பேச ஆரம்பித்துள்ளதாக பொடோலியாக் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை சீனா, ரஷ்யாவிற்கு உதவிகளை அனுப்பும் சாத்தியக்கூறுகள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே இன்று ரோம் நகரில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இதற்கிடையில் உக்ரைனின் தலைநகர் கிய்வ் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட ரஷ்ய எறிகளை தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மூன்று பேர் காயமடைந்துள்ளதாக உக்ரேனிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 07:40 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இரண்டு உடலங்கள் மீட்கப்பட்டதாகவும், மூன்று பேர் மருத்துவமனைக்கு காயங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் உக்ரைனின் நகரத்தின் அவசர சேவை தெரிவித்துள்ளது.