நாடு முழுவதும் இன்றைய தினமும் சுழற்சி முறையல் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும்,
மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.
அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில், காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணிநேரமும்,
மாலை 5 மணி முதல் இரவு 09 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளது.