வடமாகாண மீன்பிடித்துறையில் இந்திய முதலீடா?

வடமாகாண மீனவர்களுக்கு உதவுவதற்காக இந்திய முதலீடுகளை இங்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

வடமாகாண மீனவர்களிற்கான வாழ்வாதார உதவிதிட்டத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையில் மீனவர்களுக்கு உதவிகளை செய்யும் முகமாக இந்திய முதலீடுகளையும் இங்கு கொண்டு வருவதற்கு நாங்கள் எண்ணியுள்ளோம். இதன் மூலம் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம்

மற்றும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு அனைவரது ஒத்துழைப்பு தேவை குறிப்பாக கடற்தொழில் அமைச்சு மாவட்ட செயலக ஒத்துழைப்பு தேவை.

இந்த உதவிகள் வடக்கு மீனவர்களுக்கு மட்டுமல்லாது எனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தவுள்ளோம். மேலும் இந்திய அரசாங்கத்தினால் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

குறித்த கலாச்சார மண்டபத்தில் இரு நாடுகளும் இணைந்து ஏவ்வாறு மேலாண்மை செய்வது என்பது தொடர்பில் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.இந்தக் கலாச்சார மண்டபம் யாழ்ப்பாண மக்களுக்கு உரியது.

Recommended For You

About the Author: admin