பாடசாலையில் வழங்கப்பட்ட சத்துணவை உட்கொண்ட 9 மாணவர்கள் வாந்தி எடுத்துள்ளதுடன் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சம்பவம் மட்டக்களப்பு – வடமுனை ஊத்துச்சேனை வீரநகர் அ.த.க பாடசாலையில் இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சின் மதியபோசன உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இங்கு கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு உணவை பாடசாலை நிர்வாகம் தனியார் ஒருவரிடமிருந்து பெற்று வழங்கிவருகின்றனர். இந்நிலையில் வழமைபோல நேற்று காலை சோறும், சோயாமீற் கறியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதையடுத்து
அதனை மாணவர்கள் உட்கொண்ட பின்னர் சில மாணவர்கள் வாந்தி எடுத்து மயக்கமடைந்ததையடுத்து அங்கு மாணவர்களுக்கிடையே பதற்றநிலை ஏற்பட்டது இதனையடுத்து வாந்தியெடுத்த 9 மாணவர்களும் உடனடியாக வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்யைளிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொதுசுகாதார அதிகாரிகள் மற்றும் வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்