நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணக்கார தனது உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் வீடு ஆகியவற்றை அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோது, தனது குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவரிடமிருந்து சிறிய காரொன்றை பெற்றுள்ளதாகவும்,
அதனையே தொடர்ந்து பயன்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.
தான் அமைச்சரவை கூட்டங்களையும் அமைச்சுக் கடமைகளையும் புறக்கணித்து வருவதன் காரணமாக அமைச்சின் ஏனைய வசதிகளை பயன்படுத்துவது
நெறிமுறையற்றது என்பதால் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சு பதவிகள் ஜனாதிபதியினால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து,
வாசுதேவ நாணயக்கார, தனது அமைச்சு பொறுப்புக்களை முறையாக செய்ய போவதில்லை என அறிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.