எதிரி நாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் உக்ரைன் ஜனாதிபதி! குழப்பம் அடைந்துள்ள ரஷ்யப் படை…!

ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் நான்காவது சுற்று துருக்கியில் இன்று செவ்வாய்கிழமையும் தொடரும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் காணொளிப் பதிவை வெளியிட்ட அவர், பேச்சுவார்த்தை “சிறப்பாக” இடம்பெற்று வருவதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் “எனினும் பார்ப்போம் இன்று அது தொடரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை நேற்று திங்களன்று லுஹான்ஸ்க் மற்றும் கிய்வ் பகுதிகளில் இருந்து 3,806 பொதுமக்கள் தப்பிச் செல்ல உக்ரைனியப் படைகளால் உதவ முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ரஷ்ய துருப்புக்கள் இதுபோன்ற எதிர்ப்பை உக்ரைனில் இருந்து எதிர்பார்க்கவில்லை” என்றும் எனவே அவர்கள் குழப்பம் அடைந்துள்ளதாகவும் ஜெலன்ஸ்கி தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் போர்க்களத்தை விட்டு ஓடுகிறார்கள். உபகரணங்களை கைவிட்டு செல்கிறார்கள்;;”. இன்று, ரஷ்ய துருப்புக்கள், உண்மையில், “எங்கள் இராணுவத்திற்கு உபகரணங்களை வழங்குபவர்களாக மாறியுள்ளனர். கனவில் கூட அவர்கள் இதனை கற்பனை செய்து பார்த்திருக்கமாட்டார்கள்”.

இதேவேளை நேற்று திங்களன்று ரஷ்யாவின் சேனல் ஒன் செய்தியில் போர் எதிர்ப்புப் பதாகையை ஏந்திய எதிர்ப்பாளர் ஒருவருக்குத் தனது தனிப்பட்ட நன்றியை உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். போர் எதிர்ப்பு கொள்கையை கொண்டுள்ள ரஷ்ய மக்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: admin