உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள், உணவு மற்றும் பணத்தை தொடர்ந்து வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். ட்வீட் பதிவு ஒன்றில், “உக்ரேனிய ஏதிலிகளை அமெரிக்காவும் திறந்த கரங்களுடன் வரவேற்கும்” என்று கூறியுள்ளார். முன்னதாக திங்களன்று, அமெரிக்கா தினசரி “பல்லாயிரக்கணக்கான தொன் மனிதாபிமான பொருட்களை” உக்ரைனுக்கு வழங்குகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை, பைடன் அவசரகால செலவினப் பொதியில் கையெழுத்திட்டார், அது உக்ரைனுக்கு 13.6 பில்லியன் டொலர் உதவியாக அமைந்திருந்தது. அத்துடன் அதில் பாதி நிதித்தொகை இராணுவ உதவிக்காக இருந்தது.
You are here:
Home
உலகச்செய்திகள்