நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து பதில் கிடைக்குமா இல்லையா என்ற விடயம் தொடர்பாக மக்கள் சிந்தித்து வருவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சௌபாக்கிய நோக்கு கொள்கை அறிக்கையை வாசித்த மக்கள் இந்த அரசாங்கம் தொடர்பில் விசேட எதிர்பார்ப்பை கொண்டிருந்ததுடன் நாடு புதிய பாதையில் பயணிக்கும் என எதிர்பார்த்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் தற்போது அரச இயந்திரம் இயங்காத நிலைமைக்கு வந்துள்ளது. இரண்டாம் உலகப் போர் காலத்திலும் இப்படியான நிலைமை இருக்கவில்லை என பழையவர்கள் கூறியுள்ளனர் எனவும் ரணில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நிகழ்ச்சித் திட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.