மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடியினால் மக்கள் வரிசையில் நின்று அவதிப்படுகின்றனர் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, நேற்று தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கடந்த வருடம் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தியிருந்தால், மக்கள் இப்போது வரிசையில் நின்று அவதிப்பட்டிருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
2021ம் ஆண்டு இறக்குமதிக்காக 20.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை செலவிட்டுள்ளதாகவும், பெற்றோலியம், திரவ எரிவாயு, நிலக்கரி மற்றும் மருந்துக்காக 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே செலவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.