உக்ரைனில் இரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக நேட்டோ எச்சரித்துள்ளது. நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும், போர் தொடர்பான சர்வதேச சட்டத்தை ரஷ்யா மீறினால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் நேட்டோ எச்சரித்துள்ளது.
இதனால் நேட்டோ உறுப்பு நாடுகள் கவலை அடைந்துள்ளதாகவும், உக்ரைனில் உயிரி ஆயுத ஆய்வகங்கள் இருப்பதாக ரஷ்யா தவறான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை காரணம் காட்டி ரஷ்யா இரசாயன தாக்குதலை நடத்தலாம் என்றும், நேட்டோ இது குறித்து மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.