
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பறங்கியாற்று பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்படாத இடத்தில் பறங்கியாறு ஆற்று கிடக்கை பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு வாகன, சாரதிகள் கைது செய்யபவபட்டுள்ளதுடன் , இரண்டு உழவுயந்திரங்களும் நட்டாங்கண்டல் போலிசாரால் இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளன.




நட்டாங்கண்டல் இரகசிய பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக நட்டாங்கண்டல் போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் ,அதன் சாரதிகள் இருவரையும் பொலிஸ் பிணையில் செல்ல பொலிசார் அனுமதித்யளித்துள்ளனர். ககுறித்த இரு சாரதிகளையும் மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.