யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிப்பதற்க்காக ரூபா 250000/- பெறுமதியான கற்றல் உபகரணங்கள் திருகோணமலை – மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட பெரியவெளி தி/மூ/ஶ்ரீ/ கதிரேசர் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 174 மாணவர்களுக்கு அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கான புத்தக பைகள், அப்பியாசக் கொப்பிகள், கணிதப் பெட்டிகள் என்பனவே வழங்கிவைக்கப்பட்டுள்ளன.அத்து டன் அப் பாடசாலையில் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த 2 மாணவர்களுக்கு ஒரு தொகை நிதியும் கையளிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரம இயக்குநர் மோகன் சுவாமிகள்,
கோட்டக்கல்வி அதிகாரி, கிராம அபிவிருத்திச் சங்க தலைவர், மாதர் சங்க தலைவி, ஆலயத்தின் நிர்வாக சபையினர், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.