தென்னை பயிர் செய்கை சபையினரால் இன்று கரவெட்டி, புலோலி, அம்பன், ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தெங்கு பயிர்செய்கையில் ஈடுபடும் 115 பயனாளிகளுக்கு இன்று மானியங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தென்னை பயிர்செய்கை பிராந்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.ரவிமயூரன் தலமையில் காலை 10:00 மணிக்கு கரவெட்டி கமநல சேவை நிலையத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிராந்திய தென்னை பயிர் செய்கை முகாமையாளர் தே.வைகுந்தன், தேசிய தமிழர் சக்தி யாழ் மாவட்ட இணைப்பாளர் J. சத்தியேந்திரன், கரவெட்டி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் த.திலீப், புலோலி கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், அகில இலங்கை சமாதான நீதவானும் தென்மராட்சி தேசிய மக்கள் சக்தி இணைப்பாளருமான லயன் சி.ஜெயசங்கர் மற்றும் உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பு பிரதிநிதிகள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் கரவெட்டி, புலோலி, அம்பன் கமநல சேவை பிரிவுகளில் 115 பயனாளிகளுக்கான ஊடுபயிர் செய்கையாளர்களுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.