கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் 29 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இரு மாடி வகுப்பறை கட்டிடம் நேற்று (15-03-2022) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழுள்ள சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்குரிய புதிய இருமாடி வகுப்பறை கட்டிடம் 2019ம் ஆண்டின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் 29 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது
குறித்த கட்டடத்தினை நேற்று (15-03-2022) பகல் 10 மணிக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ் எம் சமன்பந்துல சேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாடசாலை கட்டத் தொகுதியை திறந்து வைத்தார்.
பாடசாலை முதல்வர் பெருமாள் கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ. உதயகுமார் மற்றும் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் இ.கமலராஜன் வலயக் கல்வி திணைக்கள உத்தியோகத்தர்கள் அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலையில் கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்

கிளிநொச்சி கல்வி வலயத்தின் பின்தங்கிய பாடசாலையில் ஒன்றாக கானப்படுகின்ற மேற்படி பாடசாலையானது 200 இற்கும் மாணவர்களை கொண்டு இயங்கி வருகின்ற போதும் பல்வேறு தேவைப்பாடுகள் நிறைந்த படசாலையாக கானப்படுகின்ற நிலையில் அதிபரின் அயராத முயற்சி காரணமாக குறித்த கட்டிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.