உக்ரைனில் மரியுபோல் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டர் மீது ரஷ்யப் படைகள் குண்டுவீசித் தாக்கியுள்ளதாக நகரத்தின் துணை மேயர் தெரிவித்துள்ளார்.
1,000 முதல் 1,200 பேர் வரை கட்டிடத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரியுபோல் நகரம் ரஷ்யப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 300,000 பேர் நீர், மின்சாரம், எரிவாயு இல்லாமல் சிக்கியுள்ளனர். உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் குறைவாக உள்ளன, மேலும் மனிதாபிமான உதவிகளை வழங்க ரஷ்யா அனுமதிக்கவில்லை.
போரின் தொடக்கத்திலிருந்து குறித்த நகரம் தொடர்ந்து ரஷ்ய ஷெல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. மேலும் முழு சுற்றுப்புறங்களும் தரிசு நிலமாக மாறியுள்ளன. கடந்த வாரம் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
மரியுபோலில் இருந்து சபோரிஜியா நகருக்குச் செல்லும் வழியில் புறப்பட்ட பொதுமக்களின் தொடரணி மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும், ஒரு குழந்தை உட்பட ஐந்து பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.