கூட்டுறவு சமஸ்டியே பொருத்தம் எனவும், பொது சன வாக்கெடுப்பு நடார்த்த வேண்டும் எனவும் இந்தியா கூறும் நிலையில் 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் போதும் என நாங்கள் கேட்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்தார்.
தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.
உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்திருப்பதனால் உலகில் ஏற்பட்டுள்ள விலைவாசிஅதிகரிப்பு எம்மையும் பாதித்திருக்கின்றது. சிறிய நாடான உக்ரைன் ரஸ்யாவை சவாலாக எதிர்கொண்டது. இந்த நிலையிலும் ரஸ்யா உக்ரைனின் பல பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளது. அவர்கள் முழுமையாக பிடித்துவிடலாம்.
ஆனால் அமெரிக்காவின் நேட்டோ படைகளும் தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் சொல்கின்றது. இதேவேளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஸ்யாமீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ரஸ்யாவுடன் வியாபாரமே செய்யக்கூடாது என அமெரிக்கா கேட்கின்றது.
கேட்டு பொறுமையாக இருந்த இந்தியா நேற்றைய தினம் ரஸ்யாவுடன் அமெரிக்காவை எதிர்த்து வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டனர். டொலர்களை பயன்படுத்தி அல்ல. இந்திய ரூபாய்களை கொடுத்த ரஸ்யாவின் பொருட்களை வாங்குவதுடன், ரஸ்ய நாணயத்தின் ஊடாக இந்திய பொருட்களை வாங்குகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்கா கடுமையாக இந்தியாவை சாட தொடங்கியுள்ளது. சீனாவில் உள்ள பத்திரிகை ஒன்று வழமையாக இந்தியாவிற்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்துள்ள நிலையில், நேற்று இந்தியாவிற்கு சார்பாக எழுதியுள்ளது. பனிப்புார் என்ற நிலைமைகள் இப்பொழுது மாறி 3ம் உலக யுத்தம் தொடங்குவதுபோன்றதான நிலையில் அரசியல் சரித்திரங்கள் மாறியுள்ளது.
அமெரிக்கா எப்படி போனாலும் நாங்கள் இந்தியாவுடனேயே நிற்க வேண்டும். இந்தியாவை நாங்கள் பகைத்தால் ஆணிவேரையும் இழந்து போய்விடுவோம் எனற கடந்தகால அனுபவங்களையும் விளங்கிக்கொள்ள வேண்டும். கடந்த கால அனுபவங்களைக்கொண்டு நாங்கள் நிதானமாக செயற்பட வே்ணடும்.
நாங்கள் அமெரிக்காவுடனும் பேசவேண்டும். மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை கொண்டு வந்ததெல்லாம் அமெரிக்காதான். ஆனாலும் எந்தவித எதிர்மனப்பாங்கில்லாமலும் நாங்கள் நிக்கின்றோம்.
அமெரிக்காவுடன் பேசுவதற்கு மூவர் சென்றிருந்தார்கள். நீங்கள் அறிவீர்கள். உடனடியாக 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தக்குாரி அதனை இந்தியாவரை கொண்டு சென்று கொடுத்தார்கள். அதனை யார் செய்தது? பக்கத்து நாடுதான் செய்தது. ஏன் நீ அமெரிக்காவுக்கு சென்றீர்கள் என்பதற்காகவே அதனை செய்தார்கள்.
இன்று நாங்கள் சிதறிப்போனோம். மக்களிடமும் சிதறிப்போனோம். 13ம் திருத்தம் நடைமுறையில் உள்ளதுதான என சொல்லப்படுகின்றது. சுமந்திரனும் விளக்கம் சொல்கின்றார். கூட்டுறவு சமஸ்டிதான் உங்களிற்கு பொருத்தம் என மோடி சொல்கின்றார். புலம்பெயர்ந்து இருப்பவர்களிடமும், இங்கிருப்பவர்களிடமும் பொது சன வாக்கெடுப்பு நடார்த்த வேண்டும் என ஸ்டாலின் சொல்கின்றார்.
ஆனால் நாங்கள் 13ஐ நடைமுறைப்படுத்தினால் காணும் என கேட்கின்றோம். இதெல்லாம் அரசியலில் மாறி மாறி வருகின்றது. இந்த களச் சூழல்களை நீ்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் ஒருவரோடு முட்டுப்படும்புாது மற்றவர் எதிரான மாற்றங்களை கொண்டு வருகின்றார் எனவும் குறித்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்தார்.