கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட குடிசார் அமைப்புக்களின் சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வு நேற்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் ஆரம்பமானது. விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை அடுத்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் சுய பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்ட பெண்கள். மற்றம் சமூக சேவையில் ஈடுபட்ட பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அதிதிகள் உரைகளும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிறிமோகன், பெண்கள் அபிவிருத்தி உத்தியுாகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.