தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் அண்மை காலமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின்
பெயரினை பாவித்து ஒரு குழு ஊடக மாநாடுகளையும். கூட்டங்களையும் நடார்த்தி அதனை
பத்திரிக்கை வழியாகவும், சமூக ஊடகங்களின் மூலமாகவும் வெளிப்படுத்தி வருகின்றது.
இக்குழுவினர் உத்தியோக பூர்வமாக எந்த ஆதாரமும் இன்றி தாங்களே கூட்டணியின் புதிய
நிர்வாகிகள் எனக்கூறி தமிழ் மக்களையும், கட்சியின் ஆதரவாளர்களை குழப்பியும், ஏமாற்றியும்
வருகின்றனர் என திரு.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்..
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதபவது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் நற்பெயருக்கும் அதன் மூத்த உறுப்பினர்களுக்கும்
திட்டமிட்டு களங்கபடுத்தி தீங்கு விளைவிக்கும் இவர்களது செயற்பாடுகளுக்கு எதிராக நாம்
உரிய வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இவர்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மக்களுக்கும்
எமது கட்சியின் உருப்பினர்களுக்கு அறிய தருகின்றோம்.
இவர்களது கபட நோக்கம் அறியாமல் இaணைந்து கொண்ட உறுப்பினர்கள் அவர்களுடான
தொடர்பை துண்டிக்குமாறும் எமது அமைம்பின் சட்டரீதியான தலைமையின் கீழ ஒன்றுபடுமாறும் அன்புடன் அறிவிக்கின்றோம்.
தவிர்க முடியாத காரணத்தினால் 19.03.2022 நடார்த இருந்த கூட்டங்கள் அனைத்தும் ஏப்ரல்
மாதம் நாடாத்துவதற்கு தீர்மாணித்துள்ளோம்.
இது குறித்து எமது அறிவிப்புகள் உரிய உறுப்பினர்களுக்கு பதிவு தபால் மூலம் அமைப்பின் செயளாலர் நாயகம் அவர்களினால் அனுப்பி வைக்கப்படும்.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் தகுதிக்கு மீறி பதவிகளை பெறவும் அமைப்புக்கு தீங்கு
விளைவிக்கும் நோக்கத்துட்ன் செயற்பட்ட சில உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் நலன்
கருதி செயளாலர் நாயகம் அவர்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. அக்குழுவினரே
சில அப்பாவி உறுப்பினர்களை இணைத்து இவ்விதமான விசமத்தனமான பொய்யான
குற்றசாட்டுகளை பரப்பி வருகின்றனர்.
எமது அமைப்பினால் நிராகரிக்கப்பட்ட இந்த குழுசார்பானவர்களுக்கு
தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக நாட்டில், வெளிநாட்டில் உள்ளவர்கள் யாரும் பணம், உதவிகளை செய்ய வேண்டாம் என்றும், இவர்களது செயற்பாட்டினால் தமிழர்
விடுதலைக்கூட்டணிக்கு ஏற்படபோகும் ஆபத்தினை அறியாமல் யாரும் இவர்களை ஆதரிக்க
வேண்டாம் என்றும் கூட்டணியின் செயளாலர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார் .