ஒரு மாத காலப்பகுதியில் பத்தாயிரம் லீட்டர் கோடா, 100 லீட்டர் கசிப்பு ஸ்பிரிட் இராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி கட்டைக்காடு குளப்பகுதியில் இவ்வாறு அழிக்ககப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 20 பரல்கள் இவ்வாறு அழிக்கப்பட்டதாகவும், ஒரு மாத காலப் பகுதிக்குள் குறித்த பகுதியில் ஒரு மாத காலப்பகுதியில் பத்தாயிரம் லீட்டர் கோடா, 100 லீட்டர் கசிப்பு ஸ்பிரிட் இராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளதுடன், 100 பரல்கள், வடிப்பதற்கு பயன் படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.