குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாகவும் மக்கள் பாரிய கலன்களுடன் மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர்.
கொழும்பு மாவட்டத்தின் நாவல, கொட்டாஞ்சேனை, தெமட்டகொட, ஆமர்வீதி உள்ளிட்ட பிரதேசங்களில், மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக நீண்டவரிசையில் காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
அதிகாலை வேளையிலேயே மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக மக்கள் கூடிவிடுகின்றனர்.
சிலர் பல மணித்தியாலங்களாக நீண்டவரிசையில் காத்திருந்தும் மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள முடியாது ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
இன்று விடுமுறை தினம் என்பதால் எரிபொருள் நிர்ப்பு நிலையங்களுக்கு முன்பாக இரண்டடுக்கு, மூன்றடுக்கு வரிசைகளில் மக்கள் மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்தததை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துரைத்த நுகர்வோர், ஒவ்வொரு நாளும் துன்பத்தையே அனுபவிக்கின்றோம். வரிசையில் நிற்பது முடிவுக்கு வரவில்லை. மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக இங்கு நிற்கின்றோம். 500 ரூபாய்க்கு மட்டுமே மண்ணெண்ணெயை விநியோகிக்கின்றனர்.
அரசாங்கத்தை நடத்த முடியவில்லையாயின் வெளியேறி செல்லுங்கள். இந்த அரசாங்கம் எம்மை பாரிய துன்பத்துக்குள் தள்ளியுள்ளது.
உழைத்து பெறும் வருமானத்தில் பொருட்களை வாங்கி உண்ண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தை வெளியேற்றுங்கள்.
காலையிலிருந்து மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் நிற்கின்றோம். எரிவாயும் இல்லை மண்ணெண்ணையும் இல்லை. எவ்வாறு சமைத்து உண்பது?