பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் சர்வதேச பொலிஸின் தலைவர் டொக்டர் அஹமட் நாசர் அல் ரைசிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் டுபாயில் இடம்பெற்றது.
இதன்போது குற்றம், பயங்கரவாதத்தை தடுப்பது மற்றும் சட்டஅமுலாக்கத்தை மேம்படுத்துவது குறித்த விவாதிக்கப்பட்டதாக அமைச்சின் ஊடகப்பிரிவு (20) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தலிபான்கள் 2021ஆம் ஆண்டு 15ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றியதன் பின்னர் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.