உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குமாறு அந்த நாட்டின் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் ரஸ்யாவின் மீது ஏன் தடைகளை விதிக்கவில்லை என்று அவர் இஸ்ரேலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இணையத்தின் ஊடாக உரையாற்றிய அவர், உலகிலேயே சிறந்த வான் பாதுகாப்பை இஸ்ரேல் கொண்டுள்ளது.
எனவே “நீங்கள் நிச்சயமாக எங்கள் மக்களுக்கு உதவ முடியும், உக்ரைனியர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் வாழ விரும்புகிறோம், ஆனால் எங்கள் அயலவர்கள் நாங்கள் இறப்பதை பார்க்க விரும்புகிறார்கள்” என்று மறைந்த இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயரின் கருத்தை தனது உரையின்போது ஸெலன்ஸ்கி கோடிட்டு காட்டினார்;.
உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்பு “ஒரு இராணுவ நடவடிக்கை அல்ல” என்று அவர் கூறியுள்ளார்
“இது எங்கள் மக்களை அழிப்பது, எங்கள் குழந்தைகள், குடும்பங்கள், மாநிலங்கள், நகரங்கள், கலாசாரங்கள் மற்றும் உக்ரைனியர்களின் அனைத்தையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முழு அளவிலான போர்”என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே இது உயிர்வாழ்வதற்கான இரண்டாம் உலகப் போர் என்றும் ஸெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.