உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், தொடர்ந்து 4 வாரங்களுக்கும் மேலாக அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், உக்ரைன் போரில், இதுவரை, ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த 14 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
96 விமானங்கள், 21 ஆளில்லா விமானங்கள், 118 ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், 476 பீரங்கிகளைத் தகர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
3 கப்பல்கள், 44 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு, ஆயுதந்தாங்கிய வாகனங்கள் ஆகியவற்றைத் தாக்கி அழித்துள்ளதாகவும் உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் டுவிட்டரில் பட்டியலிட்டுள்ளது.