
வேர்ள்ட் விசன் நிறுவனத்தினால் அக்கராயன் வைத்தியசாலைக்கு உளநல சிகிச்சை நிலையம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.


வேர்ள்ட் விசன் நிறுவனத்தினால் ஒரு மில்லியன் நிதி செலவில் அமைக்கப்பட்ட குறித்த சிகிச்சை நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கனடா நாட்டின் ஜே எம் எவ்ப் ஓ ஏ நிதியத்தின் தலைவர் வைத்தியர் எம் மைலாசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன், உளநல மருத்துவர் ஜெயராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விடுதியுடன் கூடிய குறிதத் சிகிச்சை நிலையத்தில் மக்கள் தங்கி நின்று சிகிச்சை பெற்றக் கொள்ளக்கூடிய வகையில் குறித்த சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.