இயற்கை அனர்த்தங்களின் போது பல ஆண்டுகளாக இன்னல்களை எதிர்நோக்கும் மயிலவாகனபுரம் கொழுந்துப்பிலவு பிரதான வீதி நிரந்தர வீதியாக மாறவுள்ளது.
குறித்த வீதியானது கரைச்சி பிரதேச சபையினால் ரெடப் திட்டத்தினூடாக 190 மில்லியன் ரூபாய் செலவில் அமையவுள்ளது. குறித்த வீதியில் அமைந்துள்ள போக்குவரத்துக்கு அபாயமானதாகக் காணப்படும் பாலமும் 150 மில்லியன் ரூபாய் செலவிலும் மீதி 30 மில்லியன் ரூபாய் செலவில் வீதியும் நிரந்தர வீதியாக மாற்றப்படவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நேற்றைய தினம் மயில்வாகனபுரத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் தவபாலன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஜீவராசா வட்டார அமைப்பாளர்கள் பிரபாஜிதன் குமார் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.