நாட்டில் கொவிட்19 அபாயம் அதிகமாக காணப்பட்டிருந்தபோது தொற்றாளர்களை தனிமைப்படுத்தி தங்கவைப்பதற்காக இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றில் மருதங்கேணி, நாவற்குழி, வட்டுக்கோட்டை பகுதிகளில் அமைந்திருந்த இடைத்தங்கல் முகாம்கள்,
மாகாண சுகாதார அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இருந்த நிலையில், குறித்த இடைத்தங்கல் முகாம்களுக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள், குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள் என பல பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் நாட்டில் கொவிட் நெருக்கடி குறைந்ததை தொடர்ந்து இடைத்தங்கல் முகாம்கள் செயலற்றுபோனது. இந்நிலையில் அங்கிருந்த பல லட்சம் ரூபாய்கள் பெறுமதியான பொருட்கள் வெளியேற்றப்பட்டபோது அவை தொடர்பான கணக்கு பதிவேட்டில் பதியப்படாமல் அவை மாயமாகியுள்ளன.
இது குறித்த சர்ச்சைகள் எழுவே மாகாண கணக்காய்வு திணைக்களம் மருதங்கேணி வைத்தியசாலையில் அமைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாம் தொடர்பாக ஆய்வுகளை நடாத்தியிருந்த நிலையில் அங்கிருந்த பல லட்சம் பெறுமதியான பொருட்கள் மாயமாகியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இவை சுகாதார அமைச்சு மற்றும் இராணுவத்தினால் மேற்படி இடைத்தங்கல் முகாமிற்கு வழங்கப்பட்டவையாகும். எனவும் உறுதிப்படுத்தப்பட்ட உள்ளக தகவல்கள் தொிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கடந்த மாதம் 24ம் திகதி தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக தகவல் கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
எனினும் ஒரு மாதம் கடந்தும் அந்த விண்ணப்பத்திற்கு பதில் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வரும் நிலையில், யாரை காப்பாற்றுவதற்கான முயற்சி இதுவென கேள்வி எழுந்துள்ளது