காணாமல் போனார் விவகாரம்! கூட்டுச் செயற்பாடுகளே தேவை…! சி.அ.யோதிலிங்கம்.

கடந்த 19ம் திகதியும் 20ம் திகதியும் பிரதமர் மகிந்தராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். அங்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியும்சிவில் அமைப்புக்களும் பிரதமரின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருந்தனர். 19ம் திகதி யாழ் மாவட்ட அரசாங்க செயலகத்தின் முன்னாலும் கந்தரோடையிலும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டங்களை நடாத்தியிருந்தது. 20ம் திகதி மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்கு பிரதமர் சென்றபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” இயக்கமும் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடாத்துவதற்கு ஏற்பாடுகளை செய்திருந்தது. அதற்காக ஆர்ப்பாட்டக்காறர்கள் வந்தபோது பொலிசார் அவர்களை வழிமறித்து ஆர்ப்பாட்டம் நடாத்தவிடாது தடுத்தனர். முல்லைத்தீவிலிருந்து வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டுவில் அம்மன் கோயிலுக்கு அருகில் தடுக்கப்பட்டனர். பேரூந்திலிருந்து அவர்கள் இறங்க அனுமதிக்கப்படவில்லை. போரூந்தின் கதவுகள் யன்னல்கள் பலவந்தமாக பூட்டப்பட்டன. கோடை வெப்ப நெருக்கடியால் மூச்சுவிடவே முடியாமல் பேரூந்தில் இருந்தவர்கள் கஸ்டப்பட்டனர். இதேபோல யாழ்ப்பாணத்திலிருந்து வேலன் சுவாமிகள் தலைமையிலான குழுவினரும் மட்டுவில் வண்ணாத்திப்பாலம் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பிரதமரின் நிகழ்வு முடிவடையும்வரை போராட்ட இடத்திற்கு செல்ல அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பொலீசாரின் இத்தகைய அத்துமீறல்களினால் கோபமடைந்த தாய்மார்கள் தடைகளை மீறி செல்ல முயன்றபோது பொலீசாரால் தாக்கப்பட்டனர். வீதிக்கு குறுக்கே படுத்துக் கிடந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாய்மார்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இந்த எதிர்ப்பின் போது பல தாய்மார்கள் பொலீசாரினால் தாக்கப்பட்டனர் தொடர்ந்து தலைமைதாங்கியவர்களின் வீடுகளுக்கு சென்று படையினர் அச்சுறுத்தியதாகவும் செய்திகள் வந்துள்ளன. பல வலைத்தளங்கள் இப்போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்பியிருந்தன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 500 நாட்களுக்கு மேலாக போராட்டுங்களை நடாத்திவருகின்றனர். புதுடில்லியில்விவசாயிகள் நடாத்திய போராட்டம் போலவே தொடர்போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் துரதிஸ்டவசமாக புதுடில்லி போராட்டம் போல மக்கள் பங்கேற்பு இந்தப்போராட்டங்களுக்கு இருக்கவில்லை. பிரதமருக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் தாய்மார்கள் கறுப்பு ஆடைகளையே அணிந்திருந்தனர். கறுப்புக் கொடிகளையும் கைகளில் வைத்திருந்தனர். இது ஒருவகையில் எழுபதுகளில் தமிழ் இளைஞர் பேரவை நடாத்திய கறுப்புக்கொடிப் போராட்டங்களை நினைவுபடுத்தியிருந்தது.
1973ம் ஆண்டு தைமாதம் 13ம் திகதி தந்தை செல்வா தலைமையில்  கூடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் நடவடிக்கைக்குழு தமிழர் பிரதேசங்களுக்கு வரும் அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடிகாட்டி அவர்களின் வருகையை பகிஸ்கரிப்பது எனத் தீர்மானித்திருந்தது. இந்தத் தீர்மானத்திற்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள் தமிழ் இளைஞர் பேரவையினர்தான். பல இடங்களில் அவர்களின் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையின் கட்டுப்பாட்டையும் மீறிச் செயற்பட்டனர்.
1973ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதி தபால் தந்தி அமைச்சர் செல்லையா குமாரசூரியர் வேலணைக்கு வருகைதந்தபோது கறுப்புக்கொடி காட்டப்பட்டது. அமைச்சர் வருகை தந்தபோது இருட்டிவிட்டதால் வாகனங்கள் மூலம் வெளிச்சம் காட்டியே கறுப்புக்கொடி காட்டப்பட்டது.
அமைச்சர் செல்லையா குமாரசூரியர் மல்லாகம் வருகைதந்தபோதும் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. அமைச்சரின் வாகனம் வந்ததும் இளைஞர்கள் திடீரென வாகனத்திற்கு குறுக்கே பாய்ந்து கறுப்புக்கொடிகளைக் காட்டினர். மறைந்த தமிழ் இளைஞர் பேரவையின் தலைவர் மயிலிட்டி சி.புஸ்பராசா இளைஞர்களுக்கு தலைமை தாங்கினார்.
மூன்றாவது கறுப்புக்கொடிப் போராட்டம் சுகாதார அமைச்சர் கைதடிக்கு வருகைதந்தபோதும் இடம்பெற்றது. இங்கேயும் இளைஞர்கள் அமைச்சர்களின் வாகனத்திற்கு குறுக்கே பாய்ந்து கறுப்புக் கொடிகளைக் காட்டினர். இப் போராட்டத்திற்காக சாவகச்சேரி பொலீசார் புஸ்பராசா கமலநாதன்இ பத்மநாபாஇ கிருபாகரன்இ செல்வம்இ மரியதாஸ் ஆகியோரை கைதுசெய்து நீதிமன்றத்தில் பாரப்படுத்தினர். நீதிமன்றம் எச்சரிக்கை செய்து இளைஞர்களை விடுதலை செய்தது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக நடாத்திவரும் போராட்டங்கள் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிகோருதல்இ இலங்கையின் நீதிப் பொறிமுறைகள் உண்மையான நீதியைத்தரப்போவதில்லை என்பதை அம்பலப்படுத்துதல். பரிகார நீதிக்கான நியாயப்பாடுகளை வழங்குதல். தமிழர் விவகாரத்தை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்குதல்இ தமிழ்த்தேசிய அரசியலை தக்கவைத்தல் என்பவற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்குகின்றன. யுத்தத்திற்கு பின்னர் தமிழத்தரப்பிலிருந்து தொடர்ச்சியான போராட்டங்கள் இடம்பெறுகின்றதென்றால் அது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம்தான். பல்வேறு பலவீனங்கள் உள்ளபோதும் தமிழர் தரப்பிலிருந்து அரசிற்கு தொடர் தலையிடியைக் கொடுக்கும் போராட்டம் இதுதான்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம் என்பது தமிழ் மக்களின் பொதுப்பிரச்சினையாகும். இது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களினது தனிப்பட்ட பிரச்சினையல்ல. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் காரணமாகவே இத்துயர நிகழ்வு இடம்பெற்றது. எனவே இதற்கான போராட்டத்தை தமிழச் சமூகம் பொறுப்பெடுக்க வேண்டும். குறிப்பாக அரசியல் தலைமை பொறுப்பெடுக்க வேண்டும். மாறாக பல்வேறு நெருக்கடி நிலைக்குள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளே இதனை முன்னெடுக்கின்றனர்.
மட்டுவில் போராட்டத்தின்போது அரசியல் தலைவர்கள் பெரிதாகப் பங்கேற்கவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனும்இ வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தலைவர் தியாகராஜா நிரோசுமஇ; சாவகச்சேரி பிரதேசசபை உப தவிசாளர் மயூரனுமே தாய்மார்கள் தடுக்கப்பட்டுள்ளனர் எனக் கேள்விப்பட்டு உடனடியாக களத்திற்கு சென்றனர். பங்குபற்றியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய தாய்மார்கள் தாக்கப்பட்டபோது அதற்கு எதிரான கண்டனங்களும் பெரிதாக எழவில்லை. சிவஞ்ஞானம்இ செல்வம் அடைக்கலநாதன் போன்ற சிலரே கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
குறைந்தபட்சம் தாய்மார்கள் தாக்கப்படுகின்றனர் என்ற தகவலை அறிந்த

பின்னராவது அந்த களத்திற்கு  சென்றிருக்கலாம். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேர நெருக்கடி இருந்திருந்தால் அடுத்த மட்டத்தில் இருக்கும் உள்;ராட்சிச் சபைத்தலைவர்களாவது களத்திற்கு சென்றிருக்கலாம். இத்தனைக்கும் உள்;ராட்சிச் சபைத்தலைவர்கள் அனைவருக்கும் அலுவலக வாகனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
துரதிஸ்டமான தகவல் என்னவென்றால் மட்டுவில் பிரதேசம் சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குள் உள்ளது. இருந்தும் சாவகச்சேரி பிரதேச சபைத்தலைவரோஇ சாவகச்சேரி நகர சபைத் தலைவரோ செல்லவில்லை என்பது தான்.
தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இந்த விவகாரத்தை பலத்த அளவில் பேசு பொருளாக்கி வலுவான கண்டனத்தை அரசிற்கு தெரிவித்திருக்கலாம். அதையும் அரசியல் தலைமை செய்யவில்லை . வலைத்தளங்கள் தான் அவற்றை ஓரளவு செய்திருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் போராடுவது என்பது அவர்களின் அடிப்படை உரிமை. பேரூந்தின் கதவுகளைப் பூட்டி  அடைத்து வைத்திருப்பதற்கோ வெளியில் நின்ற தாய்மார்களை அதட்டி தாக்குவதற்கோ பொலீசாருக்கு எந்த உரிமையும் கிடையாது. இதனைக் கண்டித்து பாரிய போராட்டம் ஒன்றை அரசியல் தலைமை முன்னெடுத்திருக்க வேண்டும். அவ்வாறு முன்னெடுத்திருந்தால் இன்னோர் தடவை தாக்குதலை மேற்கொள்வதற்கு படையினர் அஞ்சியிருப்பர். ஆனால் சோகமான விடயம் கண்டன அறிக்கைகள் கூட பெரியளவிற்கு வரவில்லை என்பது தான். அரசியல் தலைவர்கள் தங்களுக்கு சம்பந்தம் இல்லாத விடயம் போல ஒதுங்கியிருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களது விவகாரத்தில் எதிர்காலத்திலாவது தவறுகள் திருத்தப்படல் வேண்டும். முதலில் இந்த விவகாரத்தை அரசியல் கூட்டுத்தலைமை பொறுப்பெடுக்க வேண்டும். கட்சி அரசியலையும் இ தேர்தல் அரசியலையும் இந்த விவகாரத்தில் சற்று ஒதுக்கி வைப்பது நல்லது. செயற்பாட்டாளர்களுக்கிடையேயுள்ள குழு வாதமுமு; அகற்றப்படல் வேண்டும். தாய்மார்களை பிரித்து குழுக்களாக கையாள்வது அவர்களின் நலன்களுக்கு உகந்ததல்ல. இப்போராட்டங்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் புலம் பெயர் சக்திகளும் குழுவாதங்களை நிறுத்துவது நல்லது.
இந்த விவகாரத்தை தமிழ் மக்களின் பொது விவகாரமாக பார்க்கும் கலாச்சாரம் கட்டியெழுப்பப்படல் வேண்டும்.

 

 

Recommended For You

About the Author: Editor Elukainews