
உக்ரைன் மீது ரஸ்யாவின் படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 135 சிறுவர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது. 184 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைனின் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இறுதியாக லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ரூபிஸ்னே நகரில் கடுமையான சண்டையின் போது இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன் டோனட்ஸ்க் நகரில் 6 மற்றும் 13 வயதான சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.அதேநேரம் 13, 14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுவர்கள் ஜபோரிஷியா பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்று வெடித்துச் சிதறியபோது காயமடைந்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.