உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்யா!

உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  உக்ரைன் மீது 30 வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகத்தின் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

உக்ரேனிய பிராந்தியத்தில் மேலும் 4கிலோ மீற்றர் முன்னேறியுள்ளதாக தெரிவித்தது. அதுமட்டுமின்றி உக்ரைனின் Batmanka, Mikhailovka, Krasny, Partizan, Stavki மற்றும் Troitskoye பகுதிகளை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், நேற்று மாலை உக்ரைனின் தலைநகர் கீவ் புறநகரான Kalinovka- வில் உள்ள நாட்டின் முக்கிய எரிபொருள் கிடங்கை ரஷ்யாவின் Kalibr ஏவுகணைகள் தாக்கி அழித்தது.

தற்போது, உக்ரைனின் 25வது விமானப்படை பிரிவுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ரஷ்யா தாக்குதலால் Kalinovka-வில் எரிபொருள் கிடங்கு கொளுந்துவிட்டு எரிந்து வானுயர கரும்புகை எழுந்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews