ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நிலையை பலவீனப்படுத்தும் வகையில் உக்ரைன் மீதான போர் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான போருக்கு மத்தியில் சமாதான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது. இருந்த போதிலும் போருக்கு முற்றுபுள்ளி வைப்பது தொடர்பில் எவ்வித அறிகுறிகளும் இல்லை .
உக்ரேனிய நகரங்கள் தாக்கப்படுவதால், ரஷ்யா ஒரு அமைதியான அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.
இது சர்வதேச அரங்கில் ரஷ்யா முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதனை காண முடிவுதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. ஜனாதிபதி புட்டினுக்கு நெருக்கமான அதிகாரிகளுடனேயே கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமை ஜனாதிபதி புட்டினின் நிலையை தடுமாற வைத்துள்ளதா எனவும் அவர் பலவீனப்படுத்தப்பட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்ய ஜனாதிபதிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உறுதியான ஆதரவு உள்ளது. எனினும் அவருக்கு நெருக்கமான பலர் அவரை விட்டு தொடர்ந்து விலகி வருவதாக தெரியவந்துள்ளது.
எப்படியிருப்பினும் பொருளாதாரத் தடைகள் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி வருவதனால் ஜனாதிபதி புட்டினை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக நடவடிக்கைகள் தீவிரமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.