
சர்வகட்சி மாநாட்டில் எவ்வித பயனுமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கார் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றில் பேச வேண்டுமே தவிர, சர்வகட்சி மாநாடுகளில் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அதில் எவ்வித பயனும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சர்வகட்சி மாநாட்டிற்கு எவ்வித சட்ட ரீதியாக அதிகாரமும் கிடையாது எனவும், ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்தி ஜனாதிபதி தனது அதிகாரத்தை பலப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து நிதி அமைச்சர் நாடாளுமன்றில் எதனையும் சொல்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதும் செல்வந்தர்களுக்கான வரிச் சலுகை வழங்கியதாகவும், வறிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மெய்யாகவே ஜனநாயகத்தை மதித்தால் சர்வகட்சி மாநாட்டை நடத்தாது இந்த பொருளாதார நெருக்கடி குறித்து நாடாளுமன்றில் பேசியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.